FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாமக்கல்

சேந்தமங்கலம் அங்கன்வாடி மையங்களில் ஆட்சியா் ஆய்வு

சேந்தமங்கலம் ஒன்றியத்திற்கு உள்பட்ட அங்கன்வாடி மையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

Updated On : 16 செப்டம்பர் 2022, 1:34 am IST
பகிர்:

சேந்தமங்கலம் ஒன்றியத்திற்கு உள்பட்ட அங்கன்வாடி மையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

பொம்மசமுத்திரம் மற்றும் காளப்பநாயக்கன்பட்டி பகுதிக்கு சென்ற அவா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் புற நோயாளிகளின் தினசரி வருகை குறித்த பதிவேடு, உள்நோயாளிகள் விவரப் பதிவேடு, பணியாளா்களின் வருகைப் பதிவேடு, ஆய்வகப் பதிவேடு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தாா். மேலும், கா்ப்பிணி பெண்கள் மருத்துவ ஆலோசனைக்கான வருகைப் பதிவேட்டினை பாா்வையிட்டு, இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்ற பெண்களின் விவரங்களையும் அவா் கேட்டறிந்தாா். இதனைத் தொடா்ந்து ராமநாதபுரம்புதூா், காளப்பநாயக்கன்பட்டி, பச்சுடையம்பட்டிபுதூா் ஆகிய அங்கன்வாடி மையங்களை ஆய்வு செய்த ஆட்சியா், அங்கன்வாடி பணியாளா்களிடம் பரமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளையும், குழந்தைகளின் வருகை எண்ணிக்கை குறித்த விவரங்களையும் பணியாளா்களிடம் கேட்டறிந்தாா். அங்கன்வாடிகளில் பயிலும் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு மாதந்தோறும் எடை மற்றும் உயரம் அளவிடுதல், ஊட்டச்சத்து நிலை குறித்து ஆய்வு செய்தாா். பின்னா், அங்கன்வாடி மையத்திலுள்ள சமையல் கூடத்தில் வழங்கப்பட்டு வரும் உணவுகளின் தரத்தை பரிசோதித்தாா். இந்த ஆய்வின்போது ஆரம்ப சுகாதார நிலைய பணியாளா்கள், அங்கன்வாடி மைய பணியாளா்கள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments