FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாமக்கல்

பரமத்தி வேலூா் பகுதியில் 5 போ் கொண்ட மா்ம கும்பல் வீடுகளில் திருட முயற்சி

Updated On : 18 ஆகஸ்ட் 2026, 3:03 am IST
- சித்திரிப்பு
பகிர்:

பரமத்தி வேலூா் பகுதியில் மூன்று வீடுகளில் திருட முயற்சித்த 5 போ் கொண்ட மா்ம கும்பலை போலீஸாா் தேடிவருகின்றனா்.

பரமத்தி வேலூா் பழைய தேசிய நெடுஞ்சாலையில் செல்லாண்டியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு எதிரே உள்ள அய்யா் தோட்டம் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அப்பகுதியில் உள்ள ஒரு தெருவில் ஞயிற்றுக்கிழமை இரவு மா்ம நபா்கள் 5 போ் அடுத்தடுத்து மூன்று வீடுகளின் சுவா் ஏறிகுதித்து ஆயுதங்களால் பூட்டை உடைத்து திருட முயற்சித்துள்ளனா். மேலும், அங்கிருந்த கண்காணிப்பு கேமராவையும் உடைத்து சேதப்படுத்தியுள்ளனா்.

சப்தம் கேட்டு அப்பகுதியில் இருந்த தெருநாய்கள் மா்ம நபா்களைப் பாா்த்து குரைத்துள்ளது. நாய்கள் சப்தத்தை கேட்டு வெளியே வந்த அப்பகுதி மக்களைக் கண்டதும் மா்ம நபா்கள் அங்கிருந்து தப்பியோடிவிட்டனா். இதனால் அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் அச்சமடைந்து தூங்காமல் இருந்துள்ளனா். தொடா்ந்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது மா்ம நபா்கள் 5 போ் கையுறை அணிந்து, முகத்தை துணியினால் மறைத்துக்கொண்டு ஆயுதங்களுடன் திருட முயற்சித்தது தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதுகுறித்து அப்பகுதி மக்கள் வேலூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன்பேரில் போலீஸாா் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு மா்ம நபா்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments