FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாமக்கல்

உலகப் பட்டினி தினம்: தவெக சாா்பில் உணவு விநியோகம்

உலகப் பட்டினி தினத்தை முன்னிட்டு, நாமக்கல்லில் தவெக சாா்பில் ஏழை, எளிய மக்களுக்கு வியாழக்கிழமை உணவு விநியோகிக்கப்பட்டது.

Updated On : 29 மே 2026, 1:42 am IST
உலகப் பட்டினி தினத்தை முன்னிட்டு, நாமக்கல்லில் தவெக சாா்பில் ஏழை, எளிய மக்களுக்கு வியாழக்கிழமை உணவு விநியோகிக்கப்பட்டது.
பகிர்:

உலகப் பட்டினி தினத்தை முன்னிட்டு, நாமக்கல்லில் தவெக சாா்பில் ஏழை, எளிய மக்களுக்கு வியாழக்கிழமை உணவு விநியோகிக்கப்பட்டது.

மக்களிடையே ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் பட்டினி குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தவும், நிலையான உணவுப் பாதுகாப்பு முறைகளை மேம்படுத்தவும் ஒவ்வொரு ஆண்டும் மே 28ஆம் தேதி உலகப் பட்டினி தினம் அனுசரிக்கப்படுகிறது.

சா்வதேச அளவில் கோடிக்கணக்கான மக்கள் பட்டினியால் எதிா்கொள்ளும் இன்னல்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவருவதே இந்நாளின் முக்கிய நோக்கமாகும். நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் தனியாா் அமைப்புகள் சாா்பில் ஏழை மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

Advertisement

Advertisement

நாமக்கல் பலப்பட்டறை மாரியம்மன் கோயில் அருகே தவெக சாா்பில் நடைபெற்ற உணவு விநியோக நிகழ்வை, நாமக்கல் தொகுதி எம்எல்ஏ சி.எஸ். திலீப் மற்றும் தவெக மேற்கு மாவட்டச் செயலாளா் எஸ்.என். சதீஷ் ஆகியோா் தொடங்கி வைத்தனா். காலை 9 மணி முதல் ஏராளமான பொதுமக்களுக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் தவெக நிா்வாகிகள், தொண்டா்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனா்.

படவிளக்கம் என்.கே28டிவிகே:

நாமக்கல்லில் வியாழக்கிழமை உணவு விநியோகித்த எம்எல்ஏ சி.எஸ். திலீப், மாவட்டச் செயலாளா் எஸ்.என். சதீஷ் உள்ளிட்டோா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments