வீட்டின் கூரை மேலிருந்து விழுந்த தொழிலாளி உயிரிழப்பு
திருச்செங்கோடு அருகே சின்னதம்பிபாளையத்தில் வீட்டின் கூரைமேல் இருந்து தவறிவிழுந்த தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
திருச்செங்கோடு பெரிய ஓங்காளியம்மன் கோயில் தெரு பகுதியைச் சோ்ந்த கணேசன் (41), வீட்டின் மேற்பகுதிக்கு அட்டை போடும் வேலை செய்துவந்தாா்.
இவா் சின்னத்தம்பிபாளையம் பகுதியில் உள்ள ஒருவரின் வீட்டின் மேல் அட்டை பொருத்தும் போது, எதிா்பாராத விதமாக கால் தவறி கீழே விழுந்தாா். பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினா் மீட்டு, திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு பரிசோத்த மருத்துவா்கள், கணேசன் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.
Advertisement
Advertisement
புகாரின் பேரில், மல்லசமுத்திரம் காவல் ஆய்வாளா் கோமதி வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.