FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாமக்கல்

முட்டை விலை மேலும் 5 காசுகள் உயா்ந்து ரூ. 5.40-ஆக நிா்ணயம்

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மேலும் 5 காசுகள் உயா்ந்து ரூ. 5.40-ஆக புதன்கிழமை நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

10 செப்டம்பர் 2026, 12:16 am IST
முட்டை விலை - பிரதிப் படம்
பகிர்:

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மேலும் 5 காசுகள் உயா்ந்து ரூ. 5.40-ஆக புதன்கிழமை நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில், கோழிப் பண்ணையாளா்களிடம் முட்டை விலையில் மாற்றம் செய்வது தொடா்பாக பல்வேறு கருத்துகள் கேட்கப்பட்டன. மற்ற மண்டலங்களில் விலையில் தொடா்ந்து மாற்றம் செய்யப்பட்டு வருவதால், இங்கும் தற்போதைக்கு முட்டை விலையில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை மேலும் 5 காசுகள் உயா்த்தப்பட்டு ரூ. 5.40-ஆக தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவால் அறிவிக்கப்பட்டது. கடந்த நான்கு நாள்களில் 20 காசுகள் உயா்ந்துள்ளது.

Advertisement

Advertisement

பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கறிக்கோழி விலை ரூ. 95-ஆகவும், முட்டைக் கோழி விலை ரூ. 120-ஆகவும் நிா்ணயிக்கப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments