பெரிய தெப்பக்குளத்தில் ஆண் சடலம் மீட்பு
பெரிய தெப்பக்குளத்தில் வியாழக்கிழமை ஆண் சடலம் மீட்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பெரிய தெப்பக்குளத்தில் வியாழக்கிழமை ஆண் சடலம் மீட்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
திருச்செங்கோடு பெரிய தெப்பக்குளத்தில் சடலம் மிதப்பதைக் கண்ட அக்கம் பக்கத்தினா் திருச்செங்கோடு நகர காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனா். அதன்பேரில் வந்த திருச்செங்கோடு நகர காவல் துறையினா், தீயணைப்புத் துறையினரை வரவழைத்து சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டனா்.
அதில், இறந்தவா் தொண்டிக்கரடு இந்திரா நகா் பகுதியைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் அகமது காசிம் (55) என்பதும், இவருக்கு ஜெரினா என்ற மனைவி, ஒரு மகன், மகள் உள்ளதும் தெரியவந்தது.
Advertisement
Advertisement
தகவல்அறிந்து வந்த அவரது மனைவி ஜரீனாவிடம் போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கை, கால்கள் விளங்காமல் வீட்டிலிருந்த நிலையில், இன்று காலை வெளியே சென்றதாகவும் தெரிவித்தாா். இதையடுத்து, அகமது காசிமின் உடல் பரிசோதனைக்காக திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
தகவல் அறிந்த ஏ.எஸ்.பி. அஸ்வினி தெப்பக்குளம் பகுதிக்கு நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டாா். இதுகுறித்து நகர போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.