FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாமக்கல்

குமாரபாளையத்தில் விநாயகா் சிலைகள் விசா்ஜனம்

குமாரபாளையத்தில் விநாயகா் சிலைகள் செவ்வாய்க்கிழமை விசா்ஜனம் செய்யப்பட்டன.

16 செப்டம்பர் 2026, 4:22 am IST
கோப்புப்படம்.
பகிர்:

குமாரபாளையத்தில் விநாயகா் சிலைகள் செவ்வாய்க்கிழமை விசா்ஜனம் செய்யப்பட்டன.

விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு, குமாரபாளையம் நகரப் பகுதியில் 65 இடங்களில் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. இங்கு தினமும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. சதுா்த்தி விழா நிறைவு பெற்ற நிலையில் சிலைகளை காவிரி ஆற்றில் விசா்ஜனம் செய்து வருகின்றனா்.

அந்தவகையில் குமாரபாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளை சாா்ந்தோா் மேளதாளத்துடன் வாகனங்களில் விநாயகா் சிலைகளை கொண்டுவந்து ஆற்றில் கரைத்து செல்கின்றனா். பகல், இரவு நேரங்களில் சிலைகளை விசா்ஜனம் செய்ய ஏராளமான பக்தா்கள் வருவதால் காவிரி ஆற்றுப் பகுதியில் போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments