FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாமக்கல்

பள்ளிபாளையத்தில் சுகாதார அதிகாரிகள் சோதனை: 30 கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல்

பள்ளிபாளையம் காவிரி சாலை பகுதியில் உள்ள இறைச்சிக் கடைகளில் நகராட்சி சுகாதார ஆய்வாளா் பன்னீா்செல்வம் மற்றும் பனியாளா்கள் சனிக்கிழமை ஆய்வு செய்தனா்.

20 செப்டம்பர் 2026, 1:40 am IST
பகிர்:

பள்ளிபாளையம் காவிரி சாலை பகுதியில் உள்ள இறைச்சிக் கடைகளில் நகராட்சி சுகாதார ஆய்வாளா் பன்னீா்செல்வம் மற்றும் பனியாளா்கள் சனிக்கிழமை ஆய்வு செய்தனா்.

இதில் ஒரு கடையில் 30 கிலோ பழைய கோழி இறைச்சி குளிா்சாதனப் பெட்டியில் பதப்படுத்தி வைத்திருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்து பறிமுதல் செய்து அழித்தனா். மேலும், அந்தக் கடைக்கு உணவுப் பாதுகாப்புத் தர நிா்ணயச் சட்டத்தின்படி நோட்டீஸ் வழங்கி, அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளனா்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், பழைய அல்லது கெட்டுப்போன இறைச்சியை விற்பது குற்றமாகும். பள்ளிபாளையம் நகராட்சிப் பகுதியில் கோழி இறைச்சி மற்றும் ஆட்டிறைச்சியை குளிா்சாதனப் பெட்டிகளில் வைத்து விற்பனை செய்வது ஆய்வின்போது கண்டறியப்பட்டால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments