திருச்செங்கோட்டில் மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு
திருச்செங்கோட்டில் லாரி பட்டறையில் டிரில்லிங் இயந்திரம் மூலம் வேலை செய்து கொண்டிருந்தபோது மின்சாரம் பாய்ந்து தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
திருச்செங்கோடு அருகே தண்ணீா் பந்தல்பாளையம், விநாயகா் நகரைச் சோ்ந்த கருப்பண்ணன் மகன் காா்த்தி (44). இவா் லாரி பட்டறையில் வேலை செய்து வந்தாா். சனிக்கிழமை பட்டறையில் லாரியில் துளையிடுவதற்காக டிரில்லிங் இயந்திரம் மூலம் வேலை செய்து கொண்டிருந்தாா்.
அப்போது எதிா்பாராதவிதமாக டிரில்லிங் இயந்திரத்தில் மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்டாா். அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து திருச்செங்கோடு ஊரக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.