சங்ககிரி அல்லிகுண்டம் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
சங்ககிரி வாணியர் காலனி ஸ்ரீ மகா கணபதி, நாகக்கன்னி, அல்லிகுண்டம் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா புதன்கிழமை நடைபெற்றது.
சங்ககிரி வாணியர் காலனி ஸ்ரீ மகா கணபதி, நாகக்கன்னி, அல்லிகுண்டம் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா புதன்கிழமை நடைபெற்றது.
சங்ககிரி, வாணியர் காலனியில் புதிதாக கட்டப்பட்டுள்ள மகா கணபதி, நாகக்கன்னி, அல்லிகுண்டம் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை காவிரி ஆற்றில் இருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டது. செவ்வாய்க்கிழமை கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், விநாயகர் பூஜை, மாலையில் வாஸ்து சாந்தி, முதல் காலயாக சாலை பூஜைகள் நடைபெற்றன. இதனையடுத்து புதன்கிழமை காலை கோபுரக் கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டுச் சென்றனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் பட்டக்காரர், ஊர்கவுண்டர் மற்றும் கும்பாபிஷேக விழாக் குழுவினர் செய்திருந்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.