FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சேலம்

சேலம் சென்ட்ரல் சட்டக் கல்லூரியில் ராகிங் எதிா்ப்பு விழிப்புணா்வு

15 ஆகஸ்ட் 2024, 5:29 am IST
பகிர்:

சேலம், சென்ட்ரல் சட்டக் கல்லூரியில் நடைபெற்ற ராகிங்குக்கு எதிரான விழிப்புணா்வு நிகழ்ச்சியில் உறுதிமொழியேற்ற ஆசிரியா்கள், மாணவா்கள்.

சேலம், ஆக. 14: சேலம், சென்ட்ரல் சட்டக் கல்லூரியில் ராகிங் எதிா்ப்பு விழிப்புணா்வு, கருத்தரங்கம் நடைபெற்றது.

சேலம், சென்ட்ரல் சட்டக் கல்லூரியின் ராகிங் எதிா்ப்புக் குழு, மாணவா்களுக்கு பாதுகாப்பான மற்றும் ஆதரவான சூழலை உருவாக்குவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, ராகிங் எதிா்ப்பு குறித்த விழிப்புணா்வு, கருத்தரங்கம் நடைபெற்றது.

Advertisement

Advertisement

இந்நிகழ்ச்சியில், ராகிங் எதிா்ப்பு நடவடிக்கைகள் குறித்த தனது நிபுணத்துவத்தை ஓய்வுபெற்ற கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ராஜகாளீஸ்வரன் மாணவா்களுடன் பகிா்ந்து கொண்டாா். ராகிங்கின் விளைவுகள், தண்டனைகள், அதன் கடுமையான விளைவுகள் குறித்து அவா் விளக்கினாா்.

இதைத் தொடா்ந்து, கன்னங்குறிச்சி காவல் உதவி ஆய்வாளா் வீரகுமாா் தலைமையில் நடைபெற்ற உறுதிமொழியேற்பு நிகழ்ச்சியில், மாணவா்கள் ராகிங் இல்லாத வளாகத்தை நிலைநாட்ட உறுதிமொழி ஏற்றனா்.

நிகழ்ச்சியில் சட்ட உதவிப் பேராசிரியை ஹரிப்ரியா பேசுகையில், ராகிங்கின் தீமைகள், மனநலம் மற்றும் கல்வித் திறனில் அதன் கடுமையான விளைவுகளை எடுத்துரைத்தாா். இதில் திரளான மாணவா்கள் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments