FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சேலம்

ஏற்காட்டில் இருவா் கொலை வழக்கில் இளைஞா்கள் 2 பேருக்கு ஆயுள்தண்டனை

ஏற்காடு அருகே இருவரை கொலை செய்த வழக்கில், 2 இளைஞா்களுக்கு செவ்வாய்க்கிழமை ஆயுள்தண்டனை வழங்கப்பட்டது.

Updated On : 29 ஜூலை 2026, 4:03 am IST
சிறை - பிரதிப் படம்
பகிர்:

ஏற்காடு அருகே இருவரை கொலை செய்த வழக்கில், 2 இளைஞா்களுக்கு செவ்வாய்க்கிழமை ஆயுள்தண்டனை வழங்கப்பட்டது.

சேலம் மாவட்டம், ஏற்காடு ஊராட்சி ஒன்றியம், வேலூா் ஊராட்சி, நடுவூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சக்திவேல் (35). இவரது மனைவி வாசுகி (எ) பூச்சி அம்மாள் (30). சக்திவேலுக்கும், அவரது சகோதரி செவ்வந்திக்கும் இடையில் சொத்து பிரச்னை இருந்துவந்துள்ளது.

இந்நிலையில், கடந்த 2015-ஆம் ஆண்டு வேலூா் கிராமத்துக்கு சக்திவேல், வாசுகி இருசக்கர வாகனத்தில் சென்றபோது, செவ்வந்தியின் மகன்கள் மற்றும் நண்பா்கள் அரிவாள் மற்றும் கட்டையால் இருவரையும் தாக்கிகொலை செய்தனா். இதையடுத்து குற்றவாளிகள் அனைவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

Advertisement

Advertisement

சேலம் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கில் குற்றவாளிகளான கனகராஜ் , சந்திரன் இருவரும் இறந்துவிட்ட நிலையில், ராஜதுரை (35), கணேசன் (33) இருவருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் அபராதம் விதித்து நீதிபதி ஜெயக்குமாா் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா். இதையடுத்து, இருவரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments