இரட்டைக் கொலை வழக்கில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தற்காலிக அரசுப் பணி ஆணை!
இரட்டைக் கொலை வழக்கில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தற்காலிக அரசுப் பணி ஆணை வழங்கப்பட்டது குறித்து...
இரட்டைக் கொலை வழக்கில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஞாயிற்றுக்கிழமை (செப். 20) தற்காலிக அரசு பணி ஆணை வழங்கப்பட்டது.
சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 16 ஆம் தேதி நடைபெற்ற இரட்டைக் கொலை சம்பவத்தில் உயிரிழந்த பூப்பாண்டியின் சகோதரி பூமணி மற்றும் தெய்வேந்திரனின் சகோதரர் ராதாகிருஷ்ணன் ஆகிய இருவருக்கும் சுகாதாரத் துறையில் டெங்கு மஸ்தூர் பணிக்கான அரசு ஆணை வழங்கப்பட்டது.
மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் உத்தரவின் கீழ் வழங்கப்பட்ட இந்த பணிக்கான அரசு ஆணையை, வருவாய் கோட்டாட்சியர் ஜெ.பி. கிரேசியா பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் வழங்கினார்.
Advertisement
Advertisement
இதனைத் தொடர்ந்து, சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயிரிழந்த பூப்பாண்டி மற்றும் தெய்வேந்திரன் ஆகிய இருவரின் உடல்களுக்கும் பிரேதப் பரிசோதனை நடைபெற்று வருகிறது. பிரேதப் பரிசோதனை முடிவடைந்ததும் உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட உள்ளன.
இதனிடையே, செய்தியாளர்களை சந்தித்த பூமணி, தங்களுக்கு தற்போது தற்காலிக பணி ஆணை மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாகவும், நிரந்தர பணி ஆணை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
மேலும், இரட்டைக் கொலை சம்பவத்தைத் தொடர்ந்து இதுவரை அரசு சார்பில் அமைச்சர் தங்களை நேரில் வந்து சந்திக்காதது மிகுந்த வருத்தம் அளிப்பதாகவும் பூமணி தெரிவித்தார்.
A temporary government job appointment order was issued to the family of the victims in the double murder case on Sunday (Sept. 20).
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.