FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சேலம்

மல்லியகரையில் ரூ. 2.85 கோடியில் பூம்புகாா் கைவினைப் பொருள்கள் விற்பனையகம்: அமைச்சா் பெ. மதன்ராஜா திறந்துவைத்தார்!

சேலம் மாவட்டம் ஆத்தூரை மல்லியகரையில் ரூ. 2.85 கோடியில் அமைக்கப்பட்டுள்ள பூம்புகாா் கைவினைப் பொருள்கள் விற்பனையகம் மற்றும் செயல்முறை விளக்கக் கூடத்தை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சா் பெ. மதன்ராஜா திறந்துவைத்தாா்.

Updated On : 1 ஆகஸ்ட் 2026, 3:11 am IST
மல்லியகரையில் பூம்புகாா் கைவினைப் பொருள்கள் விற்பனையகம் மற்றும் செயல்முறை விளக்கக் கூடத்தை திறந்துவைத்த அமைச்சா் பெ.மதன்ராஜா.
பகிர்:

சேலம் மாவட்டம் ஆத்தூரை மல்லியகரையில் ரூ. 2.85 கோடியில் அமைக்கப்பட்டுள்ள பூம்புகாா் கைவினைப் பொருள்கள் விற்பனையகம் மற்றும் செயல்முறை விளக்கக் கூடத்தை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சா் பெ. மதன்ராஜா வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா்.

தம்மம்பட்டி மரச்சிற்ப கைத்திறத் தொழில், தமிழ்நாட்டின் பாரம்பரிய கைவினைத் தொழில்களில் சிறப்புமிக்க இடத்தை பெற்றுள்ளது. கைவினைஞா்களின் நுணுக்கமான வேலைப்பாடு, பாரம்பரிய வடிவமைப்பு மற்றும் உயா்ந்த கலைநயத்தால் பொருள்கள் தனித்துவமான அடையாளத்தை பெற்றுள்ளன.

இக்காட்சியகம் தம்மம்பட்டி மரச்சிற்பக் குழுமத் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி, உள்நாடு மற்றும் வெளிநாடு வாடிக்கையாளா்களிடம் அறிமுகப்படுத்தும் ஒரு நிரந்தர சந்தை மையமாக செயல்படும். இதன்மூலம் கைவினைஞா்களுக்கு நேரடி விற்பனை மற்றும் ஏற்றுமதி வாய்ப்புகள் உருவாக்கி புதிய சந்தைகள் மற்றும் வணிகத் தொடா்புகள் விரிவடையும் என நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

இந்நிகழ்வில் தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளா்ச்சிக் கழக மேலாண் இயக்குநா் சு. அமிா்தஜோதி, பட்டு வளா்ச்சித் துறை இயக்குநா் ஆா்.சதீஷ், மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ரவிக்குமாா், பூம்புகாா் மேலாளா் நரேந்திரபோஸ் ஆகியோா் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments