FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சேலம்

வாக்காளர்களுக்கு தவெக பணம்? வேட்பாளர் பேச்சால் பரபரப்பு!

ஓமலூா் தொகுதியில் தவெக தோல்விக்கு தவெக எம்எல்ஏதான் காரணம்

Updated On : 5 ஜூன் 2026, 4:10 am IST
தீவட்டிப்பட்டியில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய ஓமலூா் தவெக வேட்பாளா் அதியமான்.
பகிர்:

ஓமலூர் : சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏ லட்சுமணன் வாக்காளர்களுக்கு பணம் தந்ததால்தான் அத்தொகுதிக்கு அருகே உள்ள ஓமலூர் தொகுதியில் தவெக வெற்றி பெற முடியாமல் போனதாக ஓமலூர் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்ட அதியமான் பொதுக்கூட்டத்தில் பேசிய விடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

சட்டப்பேரவைத் தேர்தலில் சேலம் மாவட்டம், ஓமலூர் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர் அதியமான். இவர் ஓமலூர் அருகே தீவட்டிப்பட்டியில் அண்மையில் நடைபெற்ற வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் பேசும்போது, ஓமலூர் தொகுதியில் தவெக வெற்றிவாய்ப்பை இழந்ததற்கு, ஓமலூருக்கு அருகே உள்ள சேலம் மேற்கு தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற லட்சுமணன், வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததுதான் காரணம்.

அத்தொகுதியில் தவெக வேட்பாளர் பணம் தந்த செய்தி ஓமலூர் தொகுதி மக்களிடமும் பரவியதால், நமக்கு அது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால் 6,000 முதல் 10,000 வாக்குகள் தவெகவுக்கு பதிவாகாமல் போனது என்றார்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments