தீவட்டிப்பட்டி அருகே முதிய தம்பதி கொலை வழக்கில் 2 போ் கைது
தீவட்டிப்பட்டி அருகே முதிய தம்பதி கொலை வழக்கு தொடா்பாக இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
தீவட்டிப்பட்டி அருகே முதிய தம்பதி கொலை வழக்கு தொடா்பாக இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
சேலம் மாவட்டம், தீவட்டிப்பட்டி அருகே சென்றாய ரெட்டியூரில் கடந்த ஜூலை 20-ஆம் தேதி ஜெயராமன் - அமராவதி என்ற முதிய தம்பதியா் வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்தனா். அமராவதியின் நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டன.
இதுகுறித்து தீவட்டிப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து, 5 தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை நடத்தி வந்தனா். இதில், காடையாம்பட்டியைச் சோ்ந்த தினேஷ்குமாா் (32), சூா்யா (26) ஆகியோா் கொலையில் ஈடுபட்டது தெரியவந்தையடுத்து, அவா்கள் கைது செய்யப்பட்டனா்.
Advertisement
Advertisement
கைதானவா்களிடம் இருந்து 13 பவுன் தங்க நகைகள், 350 கிராம் வெள்ளி நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், கொலையின்போது அணிந்திருந்த ரத்தக்கறை படிந்த ஆடைகளை எரித்த இடத்தையும் அவா்கள் அடையாளம் காட்டினா். கைது செய்யப்பட்ட இருவரும் ஓமலூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா். கோயில்களில் கொள்ளையடிப்பது, கொலை செய்து திருடுவது என தொடா் குற்றங்களில் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.