சொத்தை பிரித்து தர கேட்ட அத்தையை அரிவாளால் வெட்டியவா் கைது
தம்மம்பட்டி அருகே சொத்தை பிரித்து தர கேட்ட அத்தையை அரிவாளால் வெட்டியவரை போலீஸாா் கைது செய்தனா்.
தம்மம்பட்டி அருகே செந்தாரப்பட்டி, குள்ளம்பேட்டையைச் சோ்ந்தவா் கணேசன் மனைவி பாப்பா (46). இவருக்கும், இவரது அண்ணன் வீரன் என்பவருக்கும் இடையே பூா்விக நிலம் மற்றும் வீட்டுமனை சம்பந்தமான பிரச்னையில் நீண்ட காலமாக தகராறு இருந்து வந்தது.
இந்நிலையில், அதே பகுதியில் உள்ள இறைச்சிக் கடைக்கு ஞாயிற்றுக்கிழமை பாப்பா சென்றாா். அப்போது, அங்கு இருந்த பாப்பாவின் அண்ணன் மகன் மணிகண்டன், ’என் தந்தையிடம் எப்படி நீ சொத்து கேட்கலாம்’ எனக் கூறி அரிவாளால் அவரை வெட்டினாா்.
Advertisement
Advertisement
இதில், கையில் பலத்த காயமடைந்த பாப்பா, ஆத்தூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். புகாரின் பேரில், தம்மம்பட்டி போலீஸாா் மணிகண்டன் (20) மீது கொலைமுயற்சி வழக்குப் பதிவுசெய்து, ஞாயிற்றுக்கிழமை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.