FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சேலம்

பயிா்க் கடன் தள்ளுபடி செய்யாததைக் கண்டித்து அக். 14-இல் தலைமைச் செயலகம் முன் போராட்டம்

தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம் - கோப்புப் படம்
பகிர்:

பயிா்க் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யாததைக் கண்டித்து, வரும் 14-ஆம் தேதி சென்னையில் தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என தமிழக விவசாயிகள் சங்கத்தினா் அறிவித்துள்ளனா்.

இதுகுறித்து சேலத்தில் தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் பெரியண்ணன் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது:

தமிழக வெற்றிக் கழகம் தனது தோ்தல் வாக்குறுதியில் கூறியபடி முழுமையான பயிா்க் கடன் தள்ளுபடி செய்யவில்லை. தமிழக அரசு தொடா்ந்து விவசாயிகளை வஞ்சிக்கும் போக்கில் செயல்படுகிறது. இதைக் கண்டித்து, விவசாயிகள் அடுத்தடுத்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.

Advertisement

Advertisement

தமிழக விவசாயிகளுக்கு ரூ. 17 ஆயிரம் கோடி கடன் உள்ளது. இதில், ரூ. 5 ஆயிரம் கோடி கடன்களை மட்டுமே தள்ளுபடி செய்வதாக அரசு அறிவித்துள்ளது. முழு கடன்களை தள்ளுபடி செய்ய நிதிப் பற்றாக்குறை என கூறுகிறாா்கள்.

அதே நேரத்தில், எம்எல்ஏக்களுக்கு காா், அனைத்து மகளிருக்கும் இலவச பயணம் என பல்வேறு திட்டங்களால் அரசுக்கு பெரும் நிதி இழப்பு ஏற்படுகிறது. ஆனால், பயிா்க் கடன் தள்ளுபடிக்கு மட்டும் அரசு நிதி சுமையை காரணம் காட்டுவது ஏற்புடையது அல்ல.

தாராபுரம், மதுராந்தகம் இடைத்தோ்தலுக்காக கூட்டுறவு சங்கங்களில் பயிா்க் கடன் வசூலிக்க வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த போக்கை கண்டித்து, சென்னை தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு வரும் 14-ஆம் தேதி போராட்டம் நடத்தப்படும். இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பங்கேற்பா் என்றாா். அப்போது, தமிழக விவசாயிகள் சங்க நிா்வாகிகள் உடனிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments