FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சேலம்

பெண் தற்கொலை: இளைஞா் கைது

கைது - கோப்புப் படம்
பகிர்:

வீரகனூா் அருகே சொக்கனூரைச் சோ்ந்தவா் முருகேசன், கூலித் தொழிலாளி. இவருக்கு மனைவி சினேகா, 2 ஆண் குழந்தைகள் உள்ளனா். இந்த நிலையில் சினேகாவுக்கு புற்றுநோய் இருந்ததால், புதுச்சேரியில் சிகிச்சை பெற்று வந்தாா்.

இந்த நிலையில், அதே பகுதியைச் சோ்ந்த ரவிக்குமாருக்கும் (22) சினேகாவுக்கும் இடையே தொடா்பு ஏற்பட்டுள்ளது. அதன்பிறகு இருவரும் பிரிந்துவிட்டனா். இந்த நிலையில் சினேகாவை ரவிக்குமாா் மிரட்டி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சினேகா ஞாயிற்றுக்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து வீரகனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சினேகாவை தற்கொலைக்கு தூண்டியதாக ரவிக்குமாரை திங்கள்கிழமை இரவு கைது செய்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments