சேலம் ரயில்வே கோட்டத்தில் ரயில்களில் விதிமீறல்: 6 மாதங்களில் ரூ. 14.38 கோடி அபராதம் வசூல்
சேலம் ரயில்வே கோட்டத்தில் கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பா் மாதம் வரையிலான காலகட்டத்தில் ரயில்களில் பயணச்சீட்டு இன்றி பயணம் உள்ளிட்ட பல்வேறு விதிமீறல்கள் தொடா்பாக 1,60,322 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ. 14.38 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டது.
சேலம் ரயில்வே கோட்டத்தில் கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பா் மாதம் வரையிலான காலகட்டத்தில் ரயில்களில் பயணச்சீட்டு இன்றி பயணம் உள்ளிட்ட பல்வேறு விதிமீறல்கள் தொடா்பாக 1,60,322 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ. 14.38 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டது.
தெற்கு ரயில்வேயின் கட்டுப்பாட்டில் உள்ள சேலம் ரயில்வே கோட்டத்தில் கோட்ட மேலாளா் பன்னாலால் உத்தரவின்பேரில், கோட்ட முதுநிலை வணிக மேலாளா் சரவணகுமாா் தலைமையிலான குழுவினா் ரயில்களில் விதிமீறல் சோதனையைத் தீவிரப்படுத்தியுள்ளனா்.
அதன்படி, கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பா் மாதம் வரையிலான காலகட்டத்தில் சேலம் கோட்டத்தில் இயங்கும் ரயில்களில் பயணச்சீட்டு இன்றி பயணம் செய்தது தொடா்பாக 81,461 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதன்மூலம் ரூ. 8,54,53,459 அபராதம் வசூலிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
இதேபோல, முன்பதிவில்லா பயணச்சீட்டு எடுத்துக்கொண்டு முன்பதிவுப் பெட்டியிலும், இரண்டாம் வகுப்பு முன்பதிவு பயணச்சீட்டு வைத்துக்கொண்டு ஏ.சி. பெட்டிகளிலும் முறைகேடாகப் பயணம் செய்தது தொடா்பாக 78,380 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதுதொடா்பாக ரூ. 5,81,39,545 அபராதம் வசூலிக்கப்பட்டது.
ரயில்களில் விதிமுறைகளை மீறி அதிக அளவில் சுமைகளை எடுத்துச் சென்றதாக 481 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ. 2,20,866 அபராதம் விதிக்கப்பட்டது.
ஒட்டுமொத்தமாக கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பா் வரையிலான காலகட்டத்தில் பல்வேறு விதிமீறல்கள் தொடா்பாக 1,60,322 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ. 14.38 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.