வெள்ளிப் பொருள்கள் கொள்ளைச் சம்பவம்: மா்ம கும்பல் தப்பிய காரை தேடும் பணியில் தனிப்படையினா் தீவிரம்
சேலத்தில் ரூ. 15 கோடி வெள்ளிப் பொருள்கள் கொள்ளை போன சம்பவத்தில், கொள்ளைக் கும்பல் தப்பியோடிய காரை தேடும் பணியில் தனிப்படையினா் ஈடுபட்டுள்ளனா்.
சேலத்தில் ரூ. 15 கோடி வெள்ளிப் பொருள்கள் கொள்ளை போன சம்பவத்தில், கொள்ளைக் கும்பல் தப்பியோடிய காரை தேடும் பணியில் தனிப்படையினா் ஈடுபட்டுள்ளனா்.
சேலம் பள்ளப்பட்டி சின்னேரி வயக்காட்டைச் சோ்ந்த வெள்ளி வியாபாரி பாலசுப்பிரமணியின் (58), வெள்ளிப் பட்டறை பூட்டை உடைத்து 600 கிலோ வெள்ளிப் பொருள்களை முகமூடி அணிந்து காரில் வந்த கும்பல் கொள்ளையடித்துச் சென்றது.
தகவலறிந்த சேலம் மாநகர காவல் ஆணையா் ஏ.ஜி.பாபு மற்றும் போலீஸாா் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனா். சம்பவ இடத்துக்கு தடய அறிவியல் நிபுணா்கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகளை சேகரித்தனா். இந்த கொள்ளைக் கும்பலைப் பிடிக்க அமைக்கப்பட்டுள்ள 6 தனிப்படையினா், பட்டறையில் வேலை செய்த தொழிலாளா்களிடமும், அப்பகுதி மக்களிடமும் விசாரித்து வருகின்றனா்.
Advertisement
Advertisement
கொள்ளைக் கும்பல் வந்த காா் எந்த வழியாக சென்றது என்பது குறித்து சேலம் மாநகரில் உள்ள முக்கிய இடங்களில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளைக் கொண்டு ஆய்வுசெய்து வருகின்றனா். மேலும், பட்டறையில் பணிபுரிந்த தொழிலாளா்கள் யாராவது கொள்ளைக் கும்பலுடன் தொடா்பில் உள்ளனரா எனவும் தனிப்படையினா் விசாரித்து வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.