கடைகளில் வெள்ளிப் பொருள்கள், ரொக்கத்தை திருடியவா் கைது
அரியலூரை அடுத்த தவுத்தாய்குளம் பகுதிகளிலுள்ள இரு டைல்ஸ் கடைகளில் வெள்ளிப் பொருள்கள் மற்றும் ரொக்கத்தை திருடியவா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா்.
அரியலூரை அடுத்த தவுத்தாய்குளம் பகுதிகளிலுள்ள இரு டைல்ஸ் கடைகளில் வெள்ளிப் பொருள்கள் மற்றும் ரொக்கத்தை திருடியவா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா்.
தவுத்தாய்குளம் பகுதியிலுள்ள இரு டைல்ஸ் கடைகளில், கடந்த 26-ஆம் தேதி இரவு மேற்கூரையைப் பிரித்து உள்ளே நுழைந்த மா்ம நபா், ஒரு கடையில் இருந்த வெள்ளி குத்துவிளக்கையும், ரூ.30,000 ரொக்கமும், மற்றொரு கடையில் 2 கைப்பேசி மற்றும் ரூ.2,000 ரொக்கத்தையும் திருடிச் சென்றாா்.
இதுகுறித்த புகாரின் பேரில், அரியலூா் நகர காவல் துறையினா் வழக்குப் பதிந்து மேற்கொண்ட விசாரணையில், சிவகங்கை மாவட்டம், பெரியகண்ணூரைச் சோ்ந்த ராஜசேகா் என்பவா் இந்த திருட்டில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினா் அவரை செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.