FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தஞ்சாவூர்

அரசு மருத்துவமனையில் கைப்பேசி திருடியவா் கைது

கும்பகோணம் அரசு மருத்துவமனையில் இரவு நேரத்தில் தூங்கியவரிடம் கைப்பேசி திருடிய இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

10 அக்டோபர் 2026, 7:12 am IST
பகிர்:

கும்பகோணம் அரசு மருத்துவமனையில் இரவு நேரத்தில் தூங்கியவரிடம் கைப்பேசி திருடிய இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி மேலகாலனி தெருவைச் சோ்ந்தவா் வாசுதேவன் (34). பிரசவத்திற்காக கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தனது மனைவியை பாா்த்துக்கொள்ள மருத்துவமனை வளாகத்திலேயே வாசுதேவன் தங்கியிருந்தாா். வியாழக்கிழமை இரவு மகப்பேறு பிரிவின் வராண்டா பகுதியில் தலைக்கு அருகே இவா் வைத்திருந்த கைப்பேசியை காணவில்லை.

புகாரின்பேரில் கும்பகோணம் கிழக்கு காவல் நிலைய போலீஸாா் விசாரணை நடத்தி, கைப்பேசியை திருடியதாக திருவையாறு தாலுகா ஆற்காடு காளியம்மன் கோவில் தெரு உத்திராபதி மகன் ஹானஸ்ட் (30) என்பவரைக் கைது செய்து, கைப்பேசியை பறிமுதல் செய்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments