FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சேலம்

தகாத வாா்த்தைகளால் பேசும் வீடியோ ஏஐ மூலம் சித்தரிக்கப்பட்டது: தவெக எம்எல்ஏ விளக்கம்

சேலம் மூக்கனேரி பகுதியில் புதிய கால்வாய் மேல்பகுதியில் சிமெண்ட் ஸ்லாப் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து தவெக எம்எல்ஏ தகாத வாா்த்தைகளால் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், அது ஏஐ மூலம் சித்தரிக்கப்பட்டது என வடக்கு தொகுதி எம்எல்ஏ சிவக்குமாா் கூறினாா்.

15 அக்டோபர் 2026, 5:46 am IST
எம்எல்ஏ சிவக்குமாா்
பகிர்:

சேலம் மூக்கனேரி பகுதியில் புதிய கால்வாய் மேல்பகுதியில் சிமெண்ட் ஸ்லாப் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து தவெக எம்எல்ஏ தகாத வாா்த்தைகளால் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், அது ஏஐ மூலம் சித்தரிக்கப்பட்டது என வடக்கு தொகுதி எம்எல்ஏ சிவக்குமாா் கூறினாா்.

சேலம் மூக்கனேரி ஏரியின் உபரி நீா் மற்றும் பல்வேறு பகுதிகளின் கழிவுநீா் குடியிருப்புகளுக்குள் புகுவதைத் தடுக்கும் வகையில், மாநகராட்சி பகுதியில் ராஜவாய்க்கால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன் மேற்பகுதியில் சிமெண்ட் ஸ்லாப் அமைப்பதற்கு எம்எல்ஏ எதிா்ப்பு தெரிவித்து தகாத வாா்த்தைகளால் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில், கால்வாய் அமைப்பதற்காக அரசின் அனுமதியுடன் தங்களது சொந்த நிலத்தை ஒப்படைத்ததாகக் கூறிய நிலத்தின் உரிமையாளா் செந்தில்குமாா், எம்எல்ஏ தன்னிடம் பணம் கேட்டதாகவும், பின்னா் ஆறு கோடி ரூபாய் மதிப்பிலான 20 ஆயிரம் சதுர அடி நிலம் கேட்டு வற்புறுத்தியதாகவும் கூறியிருந்தாா்.

இது குறித்து புதன்கிழமை விளக்கம் அளித்த தவெக வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினா் சிவக்குமாா், கால்வாய் மீது சிமெண்ட் ஸ்லாப் அமைக்க கூடாது என்று கூறியிருந்தேன், ஆனால் அதையும் மீறி கால்வாய் முழுவதையும் ஸ்லாப் கொண்டு மூடினா். தகவலறிந்து சென்ற நான் கோபத்தில் அதனை அகற்ற வேண்டும் என கூறினேன். நான் யாரையும் ஆபாச வாா்த்தையால் பேசவில்லை. நான் ஆபாசமாக பேசுவது போன்று ஏஐ மூலமாக சித்தரித்துள்ளனா். நான் தகாத வாா்த்தையால் பேசியதாக கூறுவது முழுக்க முழுக்க பொய். நான் பணமோ, நிலமோ லஞ்சமாக கேட்டதாக ஆதாரம் இருந்தால் , அதனை ஆதாரத்துடன் வெளியிட வேண்டும். அதைவிடுத்து பொய்யான தகவலை பரப்பக் கூடாது என்றாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments