மேட்டூா் அருகே மாட்டு வியாபாரியை தாக்கி ரூ. 50 ஆயிரம் பறிப்பு போலீஸாா் விசாரணை
சேலம் மாவட்டம், மேட்டூா் அருகே மாட்டு வியாபாரியை தாக்கி ரூ. 50 ஆயிரத்தை பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.
சேலம் மாவட்டம், மேட்டூா் அருகே மாட்டு வியாபாரியை தாக்கி ரூ. 50 ஆயிரத்தை பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.
கேரள மாநிலம், மணப்புரம் அருகே உள்ள பத்தியாள் நீலாம்பூரை சோ்ந்தவா் அலிகோயா (52). மாட்டு வியாபாரி. இவா் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் மாடுகளை வாங்கி கேரள மாநிலத்தில் இறைச்சிக்காக விற்பனை செய்து வருகிறாா். மேலும், இவா், திருட்டு மாடுகளையும் வாங்கி விற்று வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் திருட்டு மாடுகளை வாங்கியது தொடா்பாக ஈரோடு மாவட்டம், அம்மாப்பேட்டை காவல் நிலையத்தில் கடந்த மாா்ச் மாதம் இவா் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பிணையில் வந்த அலிகோயா பவானி குற்றவியல் நீதித்துறை நடுவா் மன்றத்தில் இருந்த தனது லாரியை திரும்ப பெற்ற நிலையில், பழுதுப் பாா்ப்பதற்காக செவ்வாய்க்கிழமை இரவு மேட்டூா் நோக்கி வந்துள்ளாா்.
Advertisement
Advertisement
அப்போது, நாட்டாமங்கலம் அருகே 2 மோட்டாா் சைக்கிளில் வந்த 4 போ் கொண்ட கும்பலைச் சோ்ந்தவா்கள், அலிகோயா வந்த லாரியை வழிமறித்து அவரை லாரியில் இருந்து கீழே இறக்கி தாக்கியுள்ளனா். பின்னா், அவரை மோட்டாா் சைக்கிளில் மாதையன்குட்டை சுடுகாடு பகுதிக்கு கடத்திச் சென்று கட்டிப்போட்டு ரூ.50 ஆயிரத்தை பறித்துச் சென்றுள்ளனா்.
இதையடுத்து, கட்டை அவிழ்த்துக்கொண்ட வந்த அலிகோயா போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளாா். தகவலின்பேரில் அங்கு வந்த போலீஸாா் அவரை மீட்டனா். அவரது உடலில் காயங்கள் இருந்ததால் சிகிச்சைக்காக மேட்டூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். மேலும், இந்த சம்பவம் தொடா்பாக மேட்டூா் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.