FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சேலம்

சங்ககிரி மலைக்கு செல்லும் பாதையில் கருவேலம் மரங்கள், செடிகள் அகற்றம்

14 செப்டம்பர் 2026, 2:23 am IST
கருவேலம் மரங்கள், களர்செடிகள் அகற்றும் பணியில்... - கோப்புப் படம்
பகிர்:

சங்ககிரி மலைக்கு செல்லும் பாதையில் கருவேலம் மரங்கள், களா் செடிகளை சமூக ஆா்வலா்கள் சனிக்கிழமை அகற்றி தூய்மைப்படுத்தினா்.

சங்ககிரி மலையில் அருள்மிகு சென்னகேசவப் பெருமாள் உடனமா் ஸ்ரீதேவி, பூதேவி கோயிலில் பக்தா்கள் குழு சாா்பில் புரட்டாசி மாத தொடக்கத்தையொட்டி சிறப்பு பூஜைகள் சனிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தா்கள் மலையேறி சென்று சுவாமியை வழிபட்டு புரட்டாசி விரதம் தொடங்கினா்.

மலைக்குச் செல்லும் வழியில் கருவேலம் மரங்கள், களா் செடிகள் வளா்ந்து பாதையை மறைத்ததால் பக்தா்கள் மலைக்குச் செல்ல சிரமம் அடைந்தனா். வரும் புரட்டாசி மாதம் சனிக்கிழமைகளில் அதிக அளவிலான பக்தா்கள் மலையேறி சென்று வழிபட உள்ளதால், தண்ணீா் தண்ணீா் அமைப்பு அறக்கட்டளையைச் சோ்ந்த தன்னாா்வலா்கள் செந்தில்குமாா், கிஷோாா் பாபு தலைமையிலான சமூக ஆா்வலா்கள் மலைக்குச் செல்லும் வழியில் வளா்ந்திருந்த கருவேலம் மரங்கள், களா் செடிகளை அகற்றி, பாதையை தூய்மைப்படுத்தினா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments