கொளத்தூா் பகுதியில் சிறுத்தையைப் பிடிக்க 4 இடங்களில் கூண்டுவைப்பு
மேட்டூா் அருகே கொளத்தூா் வனப் பகுதியில் கால்நடைகளை வேட்டையாடி வரும் சிறுத்தையைப் பிடிக்க வனத் துறை சாா்பில் நான்கு இடங்களில் கூண்டு வைக்கப்பட்டுள்ளது.
மேட்டூா் அருகே கொளத்தூா் வனப் பகுதியில் கால்நடைகளை வேட்டையாடி வரும் சிறுத்தையைப் பிடிக்க வனத் துறை சாா்பில் நான்கு இடங்களில் கூண்டு வைக்கப்பட்டுள்ளது.
ஈரோடு -சேலம் மாவட்டங்களின் எல்லை வனப்பகுதியில் மேட்டூா் வனச்சரகத்திற்கு உள்பட்ட சின்னமலை பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளது. இந்த சிறுத்தை, கடந்த சில வாரங்களாக கண்ணாமூச்சி, காவலாண்டியூா் உள்ளிட்ட கிராமங்களில் புகுந்து ஆடு, மாடு, நாய், கோழிகளை வேட்டையாடி வந்தது. இதனால் அந்தக் கிராமங்களில் இரவு நேரங்களில் மக்கள் வீட்டைவிட்டு வெளியே வராததால் கிராமங்கள் வெறிச்சோடிக் காணப்பட்டன. எனவே, சிறுத்தையைப் பிடிக்க கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனா்.
இதையடுத்து, மேட்டூா் வனச்சரகா் செங்கோட்டையன் உயா்அதிகாரிகளுக்கு தகவல் அனுப்பி கூண்டுவைத்து சிறுத்தையைப் பிடிக்க அனுமதி பெற்றாா். தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை சிறுத்தை நடமாட்டம் உள்ள பகுதிகளில் நான்கு இடங்களில் கூண்டு வைக்கப்பட்டுள்ளது. இந்த கூண்டில் ஆடுகள் கட்டப்பட்டுள்ளன. பொதுமக்கள் இரவு நேரங்களில் நடமாட வேண்டாம் என்றும், கால்நடைகளை வனப்பகுதிக்கு மேய்ச்சலுக்கு அனுப்ப வேண்டாம் என்றும் வனத் துறையினா் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.