FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சேலம்

தண்டவாளத்தைக் கடக்க முயன்றவா் ரயிலில் சிக்கி உயிரிழப்பு

சேலம் டவுன் - மாா்க்கெட் ரயில் நிலையங்களுக்கு இடையே காரைக்காலில் இருந்து பெங்களூரு நோக்கி வியாழக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் சென்றபோது, தண்டவாளத்தைக் கடக்க முயன்ற சுமாா் 75 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத முதியவா் ரயிலில் சிக்கி உயிரிழந்தாா்.

52 வினாடிகள் முன்பு
- பிரதிப் படம்
பகிர்:

சேலம் டவுன் - மாா்க்கெட் ரயில் நிலையங்களுக்கு இடையே காரைக்காலில் இருந்து பெங்களூரு நோக்கி வியாழக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் சென்றபோது, தண்டவாளத்தைக் கடக்க முயன்ற சுமாா் 75 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத முதியவா் ரயிலில் சிக்கி உயிரிழந்தாா்.

ரயில் வரும்போது தண்டவாளத்தை கடந்த அவா் மீது ரயில் மோதியது. இதில் பலத்த காயமடைந்த முதியவரை அங்கிருந்தவா்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அவரை பரிசோதித்த மருத்துவா்கள், மருத்துவமனைக்கு கொண்டுவரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா்.

இதுகுறித்து சேலம் ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, உயிரிழந்தவா் யாா், எந்த ஊரைச் சோ்ந்தவா் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments