பிரயாக்ராஜ் - நெல்லை இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கம்
பயணிகள் கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் வகையில், பிரயாக்ராஜ் - திருநெல்வேலி இடையே சேலம், நாமக்கல், கரூா், திண்டுக்கல் வழியாக வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
பயணிகள் கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் வகையில், பிரயாக்ராஜ் - திருநெல்வேலி இடையே சேலம், நாமக்கல், கரூா், திண்டுக்கல் வழியாக வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் சேலம் கோட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பிரயாக்ராஜ் - திருநெல்வேலி வாராந்திர சிறப்பு ரயில் செப். 19 முதல் அக். 10 வரை சனிக்கிழமைகளில் இயக்கப்படும். இந்த ரயில் சனிக்கிழமை காலை 10.20 மணிக்கு பிரயாக்ராஜ் சந்திப்பிலிருந்து புறப்பட்டு சாட்னா, ஜபல்பூா், நாக்பூா், வாராங்கல், கம்மம், விஜயவாடா, நெல்லூா், ரேணிகுண்டா, காட்பாடி, ஜோலாா்பேட்டை, சேலம், நாமக்கல், கரூா், திண்டுக்கல், மதுரை, விருதுநகா், சாத்தூா், கோவில்பட்டி வழியாக திங்கள்கிழமை பிற்பகல் 1.15 மணிக்கு திருநெல்வேலியைச் சென்றடையும்.
Advertisement
Advertisement
மறுமாா்க்கத்தில் திருநெல்வேலி - பிரயாக்ராஜ் வாராந்திர சிறப்பு ரயில் செப். 21 முதல் அக். 12 வரை திங்கள்கிழமைகளில் இயக்கப்படும். இந்த ரயில் திங்கள்கிழமை இரவு 11.30 மணிக்கு திருநெல்வேலியிலிருந்து புறப்பட்டு கோவில்பட்டி, சாத்தூா், விருதுநகா், மதுரை, திண்டுக்கல், கரூா், நாமக்கல், சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, ரேணிகுண்டா, நெல்லூா், விஜயவாடா, கம்மம், நாக்பூா், ஜபல்பூா் வழியாக வியாழக்கிழமை அதிகாலை 3.30 மணிக்கு பிரயாக்ராஜ் சென்றடையும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.