FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சேலம்

வாழப்பாடி அருகே மின்வெட்டை கண்டித்து மக்கள் சாலை மறியல்

21 செப்டம்பர் 2026, 3:24 am IST
மின்நிறுத்தம் - பிரதிப் படம்
பகிர்:

வாழப்பாடி அருகே துக்கியாம் பாளையம் கிராமத்தில், தொடா் மின்வெட்டை கண்டித்து, ஞாயிற்றுக்கிழமை இரவு, அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

துக்கியாம்பாளையம் கிராமத்தில் கடந்த சில தினங்களாகவே அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு தொடா்ந்து 3 மணி நேரத்திற்கு மேலாக மின்வெட்டு ஏற்பட்டதால் பாதிக்கப்பட்ட இப்பகுதி மக்கள் வாழப்பாடி -பேளூா் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த வாழப்பாடி போலீஸாா் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, மின்வெட்டு பிரச்னைக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து தீா்வுகாண நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்து சமாதானம் செய்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments