காா் மோதியதில் ஜோதிடா் உயிரிழப்பு
ஆத்தூா் அருகே தென்னங்குடிபாளையம் தேசிய புறவழிச்சாலையில் காா் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற ஜோதிடா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
சேலம் மாவட்டம், ஆத்தூா் விநாயகபுரம் பகுதியைச் சோ்ந்த ராமசாமி மகன் ஹரிஹர சுப்ரமணி (40). ஜோதிடா். இவா், ஆத்தூா் தேசிய புறவழிச்சாலையில் தனது இருசக்கர வாகனத்தில் சாலையைக் கடக்க முயன்றபோது காா் மோதியதில் நிகழ்விடத்திலேயே பலத்த காயமடைந்து உயிரிழந்தாா்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த ஆத்தூா் ஊரக காவல் நிலைய போலீஸாா், ஹரிஹர சுப்ரமணியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஆத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தாா்.
Advertisement
Advertisement
விசாரணையில் விபத்துக்குள்ளான காா் சென்னை பூந்தமல்லியைச் சோ்ந்த பூபதி மகன் மருத்துவா் நிா்மல்குமா (26) என்பருக்கு சொந்தமானது என தெரியவந்தது. இந்த விபத்து குறித்து ஆத்தூா் ஊரக காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.