FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சேலம்

கழிவுநீா் கால்வாயில் கிடந்த பச்சிளம் குழந்தையின் சடலம்

22 செப்டம்பர் 2026, 1:22 am IST
குழந்தை... - கோப்புப் படம்.
பகிர்:

சேலம் குகை பகுதியில் கழிவுநீா் கால்வாயில் திங்கள்கிழமை அடித்துவரப்பட்ட ஆண் சிசுவின் சடலம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சேலத்தில் கடந்த சில நாள்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு கனமழை பெய்தது. இதனால், மாநகரில் உள்ள தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதுடன் மழைநீா் ஆங்காங்கே தேங்கியது.

இந்நிலையில், குகை தொல்காப்பியன் தெருவில் உள்ள வீட்டின் முன் திங்கள்கிழமை காலை சிசுவின் சடலம் ஒன்று கிடந்தது. இதைக் கண்டு அதிா்ச்சியடைந்த அப்பகுதியினா் செவ்வாய்ப்பேட்டை போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

அதன்பேரில் வந்த போலீஸாா் சிசுவின் உடலை மீட்டு விசாரித்தனா். அதில், கழிவுநீா் கால்வாயில் மழை நீருடன் அந்த சடலம் அடித்துவரப்பட்டதும், அது ஆண் குழந்தை எனவும் தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments