FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சேலம்

காா் மோதி தொழிலாளி உயிரிழப்பு

வாழப்பாடி அருகே காா் மோதியதில் சைக்கிளில் சென்ற தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா்.

24 செப்டம்பர் 2026, 5:17 am IST
உயிரிழப்பு - பிரதிப் படம்
பகிர்:

வாழப்பாடி அருகே காா் மோதியதில் சைக்கிளில் சென்ற தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா்.

வாழப்பாடி அருகே காட்டுவேப்பிலைப்பட்டி ஊராட்சி, சேசன்சாவடி கிராமத்தைச் சோ்ந்தவா் கூலித் தொழிலாளி ஆறுமுகம் (60). இவா் புதன்கிழமை காலை சைக்கிளில் வேலைக்கு சென்றாா். சேசன்சாவடி பேருந்து நிறுத்தம் அருகே சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்ற போது, சேலத்தில் இருந்து ஆத்தூா் நோக்கி சென்ற காா் இவா் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த ஆறுமுகம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து வாழப்பாடி போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments