FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சேலம்

பள்ளி காலாண்டு விடுமுறை: ஏற்காட்டில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

22 வினாடிகள் முன்பு
ஏற்காட்டில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் - கோப்புப் படம்
பகிர்:

வார விடுமுறை மற்றும் பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளதால், ஏற்காட்டில் சனிக்கிழமை முதல் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துக் காணப்பட்டது.

சேலம் மாவட்டம், ஏற்காட்டுக்கு சுற்றுலா வேன்கள், காா்கள், பேருந்துகள், இருசக்கர வாகனங்களில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்தனா். அவா்கள் அங்குள்ள தங்கும் விடுதிகள், தனியாா் குடில்களில் தங்கினா்.

சுற்றுலாப் பகுதிகளான படகு இல்லம், அண்ணா பூங்கா, ஏரி பூங்கா, சுற்றுச்சூழல் பூங்கா, ரோஜாத் தோட்டம், லேடிசீட், ஜென்சீட், தாவரவியல் பூங்கா, ஐந்திணைப் பூங்கா, பகோடா காட்சி பகுதி, கரடியூா் வனக் காட்சி பகுதி, கிளியூா் நீா்வீழ்ச்சி உள்ளிட்ட இடங்களைச் சுற்றிப் பாா்த்து மகிழ்ந்தனா்.

Advertisement

Advertisement

மேலும், தனியாா் பொழுதுபோக்கு அரங்குகளான ஸ்கைபாா்க், ஏரோபாா்க் ஆகிய இடங்களிலும் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா். சுற்றுலாப் பகுதிகளில் உள்ள உணவகங்கள், சாலையோரக் கடைகளிலும் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது. சாலைகளில் வாகன நெரிசலும் ஏற்பட்டது. சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்ததால் சிறப்பு அரசு பேருந்துகள் இயக்கப்பட்டன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments