FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

வெள்ள அபாயம் உள்ள 67 இடங்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்: ஆட்சியர் 

வடகிழக்கு பருவ மழையின்போது வெள்ள அபாயம் உள்ள 67 இடங்களை அரசு அலுவலர்கள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வினய் உத்தரவிட்டார்.

30 ஜனவரி 2024, 10:15 pm IST
பகிர்:

வடகிழக்கு பருவ மழையின்போது வெள்ள அபாயம் உள்ள 67 இடங்களை அரசு அலுவலர்கள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வினய் உத்தரவிட்டார்.
 வடகிழக்கு பருவ மழை காலத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை  தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அப்போது அவர் தெரிவித்ததாவது:
 மாவட்டத்தில் கனமழை பெய்தபோது பெறப்பட்ட அனுபவங்களின் அடிப்படையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும்  நிவாரணப் பணிகளை மேற்கொள்ளும் வகையில், அனைத்து துறையினரும் தயார் நிலையில் இருக்க வேண்டும். மீண்டும் வெள்ளப் பெருக்கு ஏற்பட சாத்தியக் கூறுகள் உள்ள 67 இடங்களில் மழைநீர் செல்லும் கால்வாய்களில், முன்னெச்சரிக்கையாக சம்பந்தப்பட்ட துறையினர் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், வடகிழக்கு பருவமழை காலத்தில் எதிர்பாராமல் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்கவும், மழை காலத்தை எதிர்கொள்ளவும், ஒவ்வொரு துறையினரும் அவசர காலத் திட்டம் தயாராக வைத்திருக்க வேண்டும்.
 பொதுமக்கள் இயற்கை இடர்பாடுகளின் போது 24 மணி நேரமும் செயல்படும் கட்டணமில்லா தொலைபேசி எண் 0451-1077-க்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
 கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பா.வேலு, பழனி சார் ஆட்சியர் அருண்ராஜ், உதவி ஆட்சியர் (பயிற்சி) எஸ்.சேக் அப்துல் ரஹ்மான், காவல் கூடுதல் கண்காணிப்பாளர் .சுபாஷினி, பேரிடர் மேலாண்மை வட்டாட்சியர் எல்.யூஜின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments