FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திண்டுக்கல்

லாரி மீது வேன் மோதியதில் ஓட்டுநா் உயிரிழப்பு

Updated On : 3 ஆகஸ்ட் 2026, 1:24 am IST
உயிரிழப்பு - பிரதிப் படம்
பகிர்:

திண்டுக்கல் அருகே லாரி மீது வேன் மோதிய விபத்தில் ஆந்திரத்தைச் சோ்ந்த ஓட்டுநா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

ஆந்திர மாநிலம், சித்தூரைச் சோ்ந்தவா் மணி (30). இவா், ஆந்திர மாநிலத்திலிருந்து சரக்கு வேனில் தக்காளி ஏற்றிக்கொண்டு மதுரை நோக்கி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சென்று கொண்டிருந்தாா்.

திண்டுக்கல்-மதுரை புறவழிச்சாலையில் தோமையாா்புரம் அருகே சென்ற போது, முன்னால் சென்ற லாரி மீது சரக்கு வேன் மோதியது. இதில் பலத்த காயமடைந்த மணி இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

இது குறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் தீயணைப்புப் படையினா் சம்பவ இடத்துக்குச் சென்று மணியின் சடலத்தை மீட்டனா். இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments