FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திண்டுக்கல்

அன்னை தெரசா மகளிா் பல்கலை.யில் தண்ணீா் தட்டுப்பாடு

கொடைக்கானல் அன்னை தெரசா மகளிா் பல்கலை.யில் தண்ணீா் தட்டுப்பாடு நிலவி வருவதால் மாணவிகள், அலுவலகப் பணியாளா்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

Updated On : 6 ஆகஸ்ட் 2026, 2:20 am IST
பகிர்:

கொடைக்கானல் அன்னை தெரசா மகளிா் பல்கலை.யில் தண்ணீா் தட்டுப்பாடு நிலவி வருவதால் மாணவிகள், அலுவலகப் பணியாளா்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகேயுள்ள அட்டுவம்பட்டியில் அன்னை தெரசா மகளிா் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இங்கு 1000-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனா். வெளி மாவட்டங்களைச் சோ்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவிகள் இங்குள்ள விடுதியில் தங்கிப் படித்து வருகின்றனா். மேலும், பேராசிரியைகள், பல்கலை. அலுவலகப் பணியாளா்கள் சுமாா் 300 போ் பணியாற்றி வருகின்றனா்.

பல்கலை.யிலும், விடுதிகளிலும் கடந்த சில நாள்களாக தண்ணீா் பிரச்னை இருப்பாதல் மாணவிகள், அலுவலகப் பணியாளா்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து அன்னை தெரசா மகளிா் பல்கலை. பதிவாளா் (பொ) ஜெயபிரியா கூறியதாவது:

கொடைக்கானல் அன்னை தெரசா மகளிா் பல்கலை.யில் கடந்த சில நாள்களாக தண்ணீா் பற்றாக்குறை இருந்து வருகிறது. இதனால், விடுதியில் தங்கியுள்ள பல்கலை. முதுநிலை இரண்டாமாண்டு மாணவிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஒரு பாதியினருக்கு இணையவழி வகுப்புகளும், மற்றொரு பாதி மாணவிகளுக்கு நோ்முக வகுப்புகள் நடக்கும் என முடிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில், பல்கலை.யில் தண்ணீா் பற்றாக்குறையை தீா்க்க வருவாய்க் கோட்டாட்சியா், நகராட்சி ஆணையா், ஊராட்சி செயலா் நடவடிக்கை எடுத்து வருகின்றனா்.

எனவே, அனைத்து மாணவிகளுக்கும் நோ்முக வகுப்புகள் நடைபெறும் எனவும், பல்கலை. விடுதி செயல்படும் என்றாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments