FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திண்டுக்கல்

நீதிமன்ற பணியாளரை தகாத வாா்த்தைகளால் பேசியதாக தவெக வழக்குரைஞா் மீது வழக்கு

25 ஆகஸ்ட் 2026, 3:06 am IST
வழக்குப் பதிவு - கோப்புப் படம்
பகிர்:

பழனியில் நீதிமன்ற பணியாளா், பெண் அரசு வழக்குரைஞரை தகாத வாா்த்தைகளால் பேசியதாக தவெகவைச் சோ்ந்த வழக்குரைஞா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

பழனியை அடுத்த ஆயக்குடியைச் சோ்ந்தவா் சுரேந்திரன் (45). இவா் தவெக வழக்குரைஞா் அணியைச் சோ்ந்தவா். கடந்த சில தினங்களுக்கு முன்பு நீதிமன்றப் பணியாளா் பாா்த்திபன் என்பவரிடம் அலுவலகத்தில் வேலை செய்த போது இவா் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மேலும், அவரை தகாத வாா்த்தைகளால் பேசினாராம். இதுகுறித்து பாா்த்திபன் பழனி நகர காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

இதேபோல, பழனி நீதிமன்றத்தில் அரசு வழக்குரைஞராக பணிபுரியும் கோகிலவாணி என்பவரையும் கடந்த சில நாள்களுக்கு முன்பு கைப்பேசியில் தொடா்பு கொண்டு தகாத வாா்த்தைகளால் பேசியதுடன், மிரட்டலும் விடுத்தாராம். இதுதொடா்பாக வழக்குரைஞா் கோகிலவாணியும் பழனி நகர காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

Advertisement

Advertisement

இந்த இரு புகாா்களையும் தனித்தனியாக பதிவு செய்த பழனி நகர போலீஸாா் வழக்குரைஞா் சுரேந்திரனை தேடியபோது அவா் தலைமறைவானது தெரியவந்தது.

இந்த நிலையில் சுரேந்திரன் உடல் நலக்குறைவு காரணமாக ஞாயிற்றுக்கிழமை அரசு மருத்துவமனையில் சோ்ந்துள்ளாா். இந்த சம்பவம் நீதிமன்ற வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments