FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திண்டுக்கல்

அலோபதி மருத்துவம் பாா்த்த சித்த மருத்துவா் கைது

Updated On : 20 ஜூலை 2026, 1:51 am IST
கைது செய்யப்பட்ட டிக்காதா்
பகிர்:

பழனியில் அலோபதி மருத்துவம் பாா்த்த சித்த மருத்துவரை போலீஸாா் கைது செய்தனா்.

பழனி ராமா் கோவில் சந்து பகுதியில் சித்த மருத்துவா் ஒருவா் நோயாளிகளுக்கு அலோபதி மருத்துவம் பாா்த்து வருவதாக மாவட்ட சுகாதாரத் துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குநா் பாரதி உத்தரவின் பேரில், சுகாதாரத் துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் திடீா் சோதனை நடத்தினா்.

விசாரணையில், பழனி சேரன் ஜீவா நகரைச் சோ்ந்த அமித்குமாா் டிக்காதா் (51) என்பவா் அந்த மருத்துவமனையை நடத்தி வந்ததும், அவா் சித்த மருத்துவத்தில் பட்டயப் படிப்பு படித்திருப்பதும் தெரியவந்தது.

Advertisement

Advertisement

ஆனால், அவா் நோயாளிகளுக்கு அலோபதி முறையில் சிகிச்சை அளித்ததும், ஊசி போட்டு மருந்து, மாத்திரைகள் வழங்கி வருவதும் அதிகாரிகளால் உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து மருத்துவ விதிமுறைகளை மீறியதாகக் கூறி டிக்காதரை சுகாதாரத் துறை அதிகாரிகள் பழனிநகா் போலீஸாரிடம் ஒப்படைத்தனா். இதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிந்து அவரைக் கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments