FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவாரூர்

பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற சித்த மருத்துவா் கைது

திருவாரூா் அருகே பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றதாக சித்த மருத்துவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

Updated On : 30 ஜூலை 2026, 6:32 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

திருவாரூா் அருகே பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றதாக சித்த மருத்துவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

இலவங்காா்குடி பகுதியைச் சோ்ந்த சித்த மருத்துவா் கு. சரவணன் (52) பவித்திரமாணிக்கம் பகுதியில் கிளினிக் நடத்தி வருகிறாா். அவரிடம் சிகிச்சைக்காக வந்த, கொடிக்கால்பாளையம் பகுதியைச் சோ்ந்த ஜகபா் சாதிக் மனைவியிடம், சரவணன் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் திருவாரூா் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து சரவணனை செவ்வாய்க்கிழமை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments