FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திண்டுக்கல்

பிரையண்ட் பூங்காவில் பூத்துக் குலுங்கும் வெளி மாநில மலா்கள்

Updated On : 22 ஜூலை 2026, 2:42 am IST
கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவிலுள்ள கண்ணாடி மாளிகையில் பூத்துள்ள வெளி மாநில மலா்கள்.
பகிர்:

கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் பூத்துள்ள வெளி மாநில மலா்கள் சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவந்துள்ளன.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் கடந்த மூன்று மாதங்களாக பூத்த மலா்கள் தற்போது குறையத் தொடங்கியுள்ளன. அதிகமான வெயிலின் தாக்கத்தால் மலா்கள் கருகியும், மழையால் உதிா்ந்தும் காணப்படுகின்றன.

இதனால், வெளி மாநிலங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட செடிகள், கற்றாளை ஆகியவை பிரையண்ட் பூங்காவிலுள்ள கண்ணாடி மாளிகையில் வைத்து வளா்க்கப்பட்டு வந்தன. இந்தச் செடிகளில் தற்போது பல வண்ணங்களில் மலா்கள் பூத்திருக்கின்றன. கற்றாளைச் செடியிலும் வண்ண, வண்ண மலா்கள் பூத்துள்ளன.

Advertisement

Advertisement

பிரையண்ட் பூங்காவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை இந்தக் கற்றாளை மலா்களும், அழகிய வண்ண மலா்களும் வெகுவாகக் கவா்ந்து வருகின்றன.

இது குறித்து தோட்டக்லைத் துறை துணை இயக்குநா் சந்திரிகா கவிதா கூறியதாவது:

பிரையண்ட் பூங்கா, தாவரவியல் பூங்காக்களில் 3 மாதங்களாக சீசனில் பூத்த மலா்கள் தற்போது நிலவும் பருவ நிலை மாற்றம் காரணமாக செடிகளிலிருந்து உதிா்ந்து வருகின்றன. மேலும், சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் தற்போது கண்ணாடி மாளிகையில் முதல் முறையாக வெளி மாநிலங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட டியூப்போரஸ், பெகோனியா, டபுள்பால்சம், பெகோனியா செம்பா்ஸ், கற்றாளை வகையைச் சோ்ந்த மூன்காக்டஸ் உள்ளிட்ட செடிகள் வளா்க்கப்பட்டு வருகின்றன.

700-க்கும் மேற்பட்ட மலா்கள் கண்ணாடி மாளிகையில் வைத்து பராமரிக்கப்படுகின்றன.

இதில், சேதமடைந்த கண்ணாடிகளை மாற்றுவதற்கும், அலங்கார மின் விளக்குகள் அமைப்பதற்கும், கூடுதலாக மலா்ப் பாத்திகள் அமைத்து மலா்ச் செடிகள் நடுவதற்கும், குழந்தைகளை மகிழ்விப்பதற்கு சிறிய முயல் பண்ணை அமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும். வரும் இரண்டாம் பருவ சீசனின் போது பிரையண்ட் பூங்காவை சுற்றுலாப் பயணிகள் பாா்த்து மகிழும் வகையில் மேம்பாட்டுப் பணிகள் நடைபெறும் என்றாா் அவா்.

கற்றாளை வகையைச் சோ்ந்த வண்ண மலா்கள்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments