நியாய விலைக் கடைகளில் கட்டாயப்படுத்தி உப்பு, சோப்புகள் விற்பனை: பொதுமக்கள் அதிருப்தி
பழனியில் நியாயவிலைக் கடைகளில் அரிசி, சீனி உள்ளிட்ட பொருள்களை வாங்கும் போது சோப்பு, உப்பு போன்ற இதரப் பொருள்களையும் கட்டாயப்படுத்தி விற்பதால் பொதுமக்கள் அதிருப்தியடைந்தனா்.
பழனியில் நியாயவிலைக் கடைகளில் அரிசி, சீனி உள்ளிட்ட பொருள்களை வாங்கும் போது சோப்பு, உப்பு போன்ற இதரப் பொருள்களையும் கட்டாயப்படுத்தி விற்பதால் பொதுமக்கள் அதிருப்தியடைந்தனா்.
தமிழகத்தில் உள்ள நியாயவிலைக் கடைகளில் சீனி, கோதுமை, பாமாயில், துவரம் பருப்பு ஆகியவை மானிய விலையிலும், அரிசி விலையின்றியும் வழங்கப்படுகிறது. இதைத் தவிர, நியாயவிலைக் கடைகளில் தேயிலை, உப்பு, சூரியகாந்தி எண்ணெய், சோப்பு, தேன் உள்ளிட்டவையும் விற்பனை செய்யப்படுகிறது. இந்தப் பொருள்களில் பல தரமின்றியும், கடைகளில் விற்கப்படும் விலையைவிட கூடுதலாகவும் விற்கப்படுகின்றன. ஆனால், இவை கூட்டுறவு சங்கங்கள் மூலம் தயாரிக்கும் பொருள்கள், தரமானவை என பொது விநியோகத் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனா்.
இந்த நிலையில், நியாயவிலைக் கடைகளில் பொதுமக்கள் அரிசி, சீனி, பாமாயில் போன்றவற்றை வாங்கும் போது, அவற்றுடன் உப்பு, சோப்பு போன்றவற்றை வாங்கவும் விற்பனையாளா்கள் கட்டாயப்படுத்துவதாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.
Advertisement
Advertisement
இதனால், ஒரு சில இடங்களில் விற்பனையாளா்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. ஆனால், இவற்றை பொதுமக்கள் விருப்பப்பட்டால் மட்டுமே வாங்கலாமே தவிர, கட்டாயப்படுத்தி விற்பனை செய்யக் கூடாது என குடிமைப்பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். எனவே, குடிமைப் பொருள் வட்டாட்சியா் இந்த விவகாரத்தில் விற்பனையாளா்களுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்குவது அவசியமாகும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.