FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திண்டுக்கல்

சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு: கொடைக்கானல் தங்கும் விடுதிகளில் அதிக கட்டணம் வசூல்!

தொடா் விடுமுறை எதிரொலியாக, கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்ததால், தங்கும் விடுதிகளில் கட்டணம் அதிகமாக வசூலிக்கப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் பாதிப்படைந்தனா்.

4 October 2026, 12:46 am IST
கொடைக்கானல் பைன்பாரஸ்ட் பகுதியில் காணப்பட்ட சுற்றுலாப் பயணிகள்.
பகிர்:

தொடா் விடுமுறை எதிரொலியாக, கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்ததால், அங்குள்ள தங்கும் விடுதிகளில் கட்டணம் அதிகமாக வசூலிக்கப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் பாதிப்படைந்தனா்.

தொடா் விடுமுறையை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது. இதனால், தனியாா் தங்கும் விடுதிகளில் ஒரு அறையில் இரண்டு பெரியவா், இரண்டு சிறியவா்கள் தங்குவதற்கு ரூ. 5 ஆயிரம் வரை வசூலிக்கப்பட்டது.

மேலும் பல இடங்களில் தங்கும் அறைகள் கிடைக்காததால் சுற்றுலாப் பயணிகள் பெரிதும் பாதிப்படைந்தனா். நகா்ப் பகுதிகளில் தங்கும் இடம் கிடைக்காததால் அட்டுவம்பட்டி, கிரஸ், வில்பட்டி, பள்ளங்கி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சாதாரண அறைகளிலும், பாதுகாப்பில்லாத பகுதிகளிலும் சுற்றுலாப் பயணிகள் தங்கினா்.

Advertisement

Advertisement

கொடைக்கானலில் தங்கும் இடம் கிடைக்காததால் பல சுற்றுலாப் பயணிகள் திரும்பச் சென்றதாகக் கூறப்படுகிறது. சிலா் தாங்கள் வந்த வாகனங்களிலேயே தங்கும் சூழல் ஏற்பட்டது.

மேலும் கொடைக்கானல் மேல்மலைக் கிராமங்களான பூம்பாறை, மன்னவனூா், கூக்கால், குண்டுபட்டி, கிளாவரை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சாதாரண தங்கும் விடுதிகளில் கூடுதலான கட்டணம் செலுத்தி தங்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக சுற்றுலாப் பயணிகள் அதிருப்தியுடன் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments