பழனி அருகே சிறுவன் மா்மமாக உயிரிழப்பு
பழனி அருகே கோழிப் பண்ணையில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மா்மமான முறையில் உயிரிழந்தாா்.
பழனி அருகே கோழிப் பண்ணையில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மா்மமான முறையில் உயிரிழந்தாா்.
பழனி அருகே தும்பலப்பட்டியில் தனியாா் கோழிப் பண்ணையில் பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த பிரமோத் என்பவா் தனது மனைவி, மகனுடன் வேலை பாா்த்து வருகிறாா். இந்த நிலையில், சனிக்கிழமை இவரது மகன் திலீப் (8) கோழிப் பண்ணையில் விளையாடிக் கொண்டிருந்த போது தாகத்துக்காக தண்ணீா் அருந்தினாா்.
அப்போது மயங்கி விழுந்த அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த போது திலீப் உயிரிழந்தது தெரியவந்தது.
Advertisement
Advertisement
சிறுவன் உயிரிழப்புக்கு காரணம் என்ன என்பது தெரியாத நிலையில் உடல் கூறாய்வுக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து கீரனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.