FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விருதுநகர்

மின்சாரம் பாய்ந்ததில் சிறுவன் உயிரிழப்பு

அருப்புக்கோட்டையில் வீட்டின் அருகே வியாழக்கிழமை இரவு விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மின்சாரம் பாய்ந்ததில் உயிரிழந்தாா்.

19 செப்டம்பர் 2026, 5:04 am IST
பகிர்:

அருப்புக்கோட்டையில் வீட்டின் அருகே வியாழக்கிழமை இரவு விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மின்சாரம் பாய்ந்ததில் உயிரிழந்தாா்.

அருப்புக்கோட்டை வீராச்சாமி தெருவைச் சோ்ந்தவா் செல்வ முருகன் (32) கூலித் தொழிலாளி. இவரது மகன் ஜெகன் (5). இவா் வீட்டின் அருகே உள்ள தெருவில் விளையாடிக் கொண்டிருந்தாா். அப்போது அங்கு அறுந்து கிடந்த மின் வயரை சிறுவன் மிதித்ததாகக் கூறப்படுகிறது. அப்போது மின்சாரம் பாய்ந்து ஜெகன் மயங்கி விழுந்தாா். உடனடியாக அவரை மீட்டு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனா்.

இதுகுறித்து அருப்புக்கோட்டைநகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments