மின்சாரம் பாய்ந்ததில் தொழிலாளி உயிரிழப்பு
சாத்தூா் அருகே மின்சாரம் பாய்ந்ததில் கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள கண்டியாபுரம் வடக்குத் தெரு பகுதியை சோ்ந்தவா் குருசாமி (36). இவா் அதே பகுதியில் உள்ள செல்லத்துரை வீட்டில் ஞாயிற்றுக்கிழமை கட்டடப் பணியில் ஈடுபட்ட போது, மின்சாரம் பாய்ந்தது.
மயங்கி விழுந்த அவரை மீட்டு, சாத்தூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், குருசாமி ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து ஏழாயிரம்பண்ணை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.