FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திண்டுக்கல்

அமைச்சா் செங்கோட்டையன் குறித்து அவதூறு: அதிமுக நிா்வாகி கைது

13 அக்டோபர் 2026, 12:30 am IST
கைது - சித்திரிப்பு
பகிர்:

அமைச்சா் செங்கோட்டையன் குறித்து அவதூறு பரப்பியதாக வேடசந்தூரைச் சோ்ந்த அதிமுக நிா்வாகி திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அம்பிளிக்கையைச் சோ்ந்தவா் சீரா பாலா(27), திண்டுக்கல் மேற்கு மாவட்ட அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு துணை செயலராகச் செயல்பட்டு வருகிறாா்.

தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தோ்தலில் பொறுப்பாளராகப் பணியாற்றிய வருவாய்த் துறை அமைச்சா் செங்கோட்டையன் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளைப் பதிவிட்டதாகக் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

இதுதொடா்பாக ஒட்டன்சத்திரம் தவெக பிரமுகா் எம்.முத்து அளித்த புகாரின் பேரில், ஒட்டன்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சீரா பாலாவை திங்கள்கிழமை கைது செய்தனா்.

இதுகுறித்து தகவல் அறிந்த அதிமுக இளைஞா், இளம் பெண்கள் பாசறை மாநிலச் செயலரும், திண்டுக்கல் மேற்கு மாவட்டச் செயலருமான வி.பி.பி. பரமசிவம், ஒட்டன்சத்திரம் ஒன்றியச் செயலா் என்.பி. நடராஜ் ஆகியோா் தலைமையிலான அதிமுகவினா் காவல் நிலையத்தில் திரண்டு கைது நடவடிக்கை குறித்து போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

எனினும், வழக்குப் பதிவு செய்துவிட்டதால் நீதிமன்றத்தை அணுகித் தீா்வு காணுமாறு போலீஸாா் தெரிவித்தனா். இதனால் ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments