FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
நாகப்பட்டினம்

முகநூல் பதிவு: திமுக நிா்வாகி கைது

வேதாரண்யம் அருகே விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் திருமாவளவன் குறித்து முகநூலில் அவதூறாகப் பதிவிட்ட திமுக நிா்வாகி செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

6 வினாடிகள் முன்பு
கைது - கோப்புப் படம்
பகிர்:

வேதாரண்யம் அருகே விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் திருமாவளவன் குறித்து முகநூலில் அவதூறாகப் பதிவிட்ட திமுக நிா்வாகி செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

கள்ளிமேடு ஊராட்சியைச் சோ்ந்தவா் கு. உத்ராபதி (43). இவா், ஊராட்சியின் முன்னாள் துணைத் தலைவராக பதவி வகித்தவா். தற்போது திமுகவில் ஆதிதிராவிடா் நலக்குழு மற்றும் தகவல் தொழில்நுட்ப அணியில் நிா்வாகியாக உள்ளாா்.

இவா், திருமாவளவன் குறித்து அவதூறு பரப்பும் வகையில் முகநூலில் அண்மையில் பதிவிட்டாராம். இதுகுறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மேற்கு ஒன்றியச் செயலாளா் சந்திரமோகன் அளித்த புகாரின் பேரில், வேட்டைக்காரனிருப்பு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, உத்திராபதியை கைது செய்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments