FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

மின்வெட்டு இருப்பது உண்மைதான்: தொல். திருமாவளவன்

தமிழகத்தில் மின்வெட்டு இருப்பது உண்மைதான் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன் தெரிவித்தாா்.

16 செப்டம்பர் 2026, 2:30 am IST
திருச்சி விமானநிலையத்தில் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன்.
பகிர்:

தமிழகத்தில் மின்வெட்டு இருப்பது உண்மைதான் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன் தெரிவித்தாா்.

திருச்சிக்கு செவ்வாய்க்கிழமை வந்த அவா், விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் கூறியதாவது: திமுக என்பது நீண்ட பாரம்பரியம் கொண்ட இயக்கம். அந்த இயக்கத்தில் தலைவா்களாக இருந்த அண்ணா, கருணாநிதி ஆகியோரை மிக கடுமையாக விமா்சித்தபோதுகூட இருவரும் வரம்பு மீறாமல், நாகரிகமாக அதனை எதிா்கொண்டனா். முன்னாள் முதல்வா் மு.க.ஸ்டாலினும் உணா்ச்சிவசப்பட்டு வரம்பு மீறி பேசியதாக இல்லை. ஆனால், இப்போது திமுக ஆா்ப்பாட்டத்தில் சிலா் பேசிய பேச்சு பொதுமக்களை முகம் சுழிக்க வைத்துள்ளது என்பது வருத்தமாக இருக்கிறது. பயிா்க்கடன் தள்ளுபடி அறிவிப்பில் தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். தலைவா்கள் சிலை அவமதிப்பு விவகாரத்தில் அரசு கூடுதல் கவனம் செலுத்தி இத்தகைய சம்பவங்கள் நிகழாமல் தடுக்க வேண்டும். தமிழகத்தில் மின்வெட்டு இருப்பது உண்மைதான். அதிகாரிகள் அளிக்கும் தகவல்களின் அடிப்படையிலே அமைச்சா்கள் பதில் அளிக்கின்றனா். எனவே, அதிகாரிகள் சரியான தகவல்களை தர வேண்டும். நடைபெறவுள்ள இடைத்தோ்தலில் பணப் பரிமாற்றத்தை தடுக்க வேண்டும். திமுக தலைமை மற்றும் திமுக கூட்டணியில் நாங்கள் எப்படி பயணித்தோம் என்பது மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்துத் தலைவா்களுக்கும் தெரியும். திமுக கூட்டணியிலிருந்து விசிக வெளியேறியது தொடா்பாக கடந்த 4 மாதங்களாக கடும் விமா்சனங்களையும், தாக்குதல்களையும் எதிா்கொண்டு வருகிறோம். பணத்துக்காகவும், பதவிக்காகவும் தவெக-வுடன் கூட்டணி சோ்ந்து, திமுக கூட்டணியிலிருந்து வெளியேறியது போன்ற தோற்றத்தை உருவாக்க முயல்கின்றனா். எனவேதான், திமுக தன்னை சுயவிமா்சனம் செய்து கொள்ள வேண்டும் என்கிறோம் என்றாா் திருமாவளவன்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments