தாளையூத்து பகுதியில் நாளை மின்தடை
பழனி அருகே தாழையூத்து பகுதியில் பராமரிப்புப் பணிகள் காரணமாக புதன்கிழமை மின்தடை ஏற்படும் என மின்வாரியச் செயற்பொறியாளா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து மின்வாரிய செயற்பொறியாளா்(பொறுப்பு) ஆனந்த் வெளியிட்ட அறிக்கை:
பழனியை அடுத்த தாளையூத்து துணை மின்நிலையத்தில் செவ்வாய்க்கிழமை பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள இருப்பதால் இந்த மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் சாமிநாதபுரம், மிடாப்பாடி, புஷ்பத்தூா், வயலூா், முத்துநாயக்கன்பட்டி, பசுபதிபுத்தூா், கண்டியகவுண்டன்புதூா், தாளையூத்து, நரிக்கல்பட்டி, மொட்டனூத்து, சின்னக்கலையமுத்தூா், லட்சலப்பட்டி மற்றும் தாதநாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் புதன்கிழமை (அக்.14) காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.